புத்தளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நால்வர் கடலில் மிதந்திருந்த பாட்டிலில் இருந்த திரவப் பொருளை  குடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்தச் சம்பவம் புத்தளம் நுரைச்சோலை கடற்கரையில் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மீன்பிடி வேலைக்காக கடலில் சென்ற குழுவினர், கடலில் மிதந்திருந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து அருந்தி இருக்கலாம்.

அதன் பின்னர் அவர்களில் இருவர் உடனே மயக்கம் அடைந்து உயிரிழந்துள்ளனர். மற்ற இருவரும் கடுமையான உடல்நலக்குறைவால் புத்தளம் பொதுமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.