பாத்திமா ஷஃபியா யாமிக் – தென் ஆசிய தடகள அரங்கில் இலங்கையின் பொற்கனவாக!

ராஞ்சி, இந்தியாவில் நடைபெற்ற 2025 தென் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில், இலங்கையின் வேக நட்சத்திரம் பாத்திமா ஷஃபியா யாமிக் தன்னுடைய அதிரடியான ஓட்டத்தால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கண்டியின் விஹாரமகாதேவி விளையாட்டு கழகத்தை சேர்ந்த 26 வயதான யாமிக், மகளிர் 100 மீட்டர், 200 மீட்டர், மற்றும் 4x100 மீட்டர் ரிலே ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கங்களை வென்று, வரலாற்றில் இடம்பிடித்தார்.

அதுமட்டுமன்றி, மூன்றிலும் புதிய போட்டி சாதனைகளை பதிவு செய்த அவர், தென் ஆசிய தடகளத்தில் இலங்கையின் பெருமையை மீண்டும் உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

இலங்கை தடகள வரலாற்றில் மிகச் சிறப்பான சாதனையாளர்களில் ஒருவராக தற்போது யாமிக் திகழ்கிறார்.